குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதி கைது : 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவன் சிக்கினான்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதி கைது : 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவன் சிக்கினான்

Added : செப் 11, 2018 | கருத்துகள் (11)
Advertisement
குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதி கைது : 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவன் சிக்கினான்

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவனை, சி.பி., - சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். கோவையில், 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக, பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து, 157 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த மங்காவு ரஷீத், 44, என்பவன் தலைமறைவானான். இவனை போலீசார், தீவிரமாக தேடி வந்த நிலையில், வெளிநாடு தப்பிச் சென்றான்.
தேடப்பட்ட குற்றவாளி : கோர்ட் மூலம், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இவனது புகைப்படத்துடன் அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு விமானத்தில் வந்த ரஷீத் பாஸ்போர்ட்டை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப் பட்டது.இது குறித்து, சி.பி., - சி.ஐ.டி., போலீசாருக்கு குடியுரிமை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். விமான நிலையம் வந்த போலீசார், ரஷீத்தை கைது செய்தனர்.தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன், காரில், நேற்று மதியம் கோவை அழைத்து வந்து, ஜே.எம்., 5 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி இனியா கருணாகரன், வரும், 24ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் ரஷீத் அடைக்கப்பட்டான்.இவன் மீது பெரியகடைவீதி போலீசார், 1998ம் ஆண்டு கூட்டு சதி மற்றும் ஆயுத சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். கடந்த, 20 ஆண்டுகளாக, அரபு நாடுகளில் ரஷீத் தலைமறைவாக இருந்து வந்துள்ளான். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின், அதில் தொடர்புடைய குற்றவாளி களுக்கு, ரஷீத் அடைக்கலம் கொடுத்து உள்ளான்.தலைமறைவுகுண்டுவெடிப்பு சம்ப வத்துக்கு தீட்டிய திட்டத் திலும், இவனது பங்களிப்பு இருந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலர், தற்போது தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கும், ரஷீத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, அவனை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
18-செப்-201816:09:30 IST Report Abuse
வேலங்குடியான் இதுக்கெல்லாம் குல்லா பாய்ஸ் வரமாட்டானுங்களே.....
Rate this:
Share this comment
Cancel
karupanasamy - chennai,இந்தியா
13-செப்-201817:57:26 IST Report Abuse
karupanasamy இவனை நையப்புடைத்து பன்றி கொட்டகையில் பன்றியுடன் அடைக்கவேண்டும். இனி ஒவ்வொரு வினாடியும் இவன் பன்றியுடன் தான் இருக்க வேண்டும். இவன் இறந்த பிறகு இவனை பன்றிக்கு உணவாக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
13-செப்-201804:24:44 IST Report Abuse
 nicolethomson இவனுக்கு இன்னமும் விசாரணை எல்லாம் தேவையா? அப்படி விசாரணை வைத்தால் இந்த கொலைகாரனுக்கு சப்போர்ட் செய்து வரும் கூட்டம் அதிகரிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X