கூலி வேலைக்கு செல்லும் மருத்துவ மாணவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூலி வேலைக்கு செல்லும் மருத்துவ மாணவி

Updated : செப் 12, 2018 | Added : செப் 11, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கூலி வேலைக்கு செல்லும் மருத்துவ மாணவி

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவி ஒருவர், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக, விடுமுறை நாட்களில், கூலி வேலைக்கு செல்கிறார்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி - -மல்லிகா தம்பதியின் மகள் கனிமொழி, 21. பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 2014ம் ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண் பெற்றார். 191.05, 'கட் ஆப்' பெற்ற கனிமொழிக்கு, இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு கிடைத்தது. டாக்டர் கனவில் இருந்த கனிமொழிக்கு படிப்பை தொடர முடியாமல், வறுமை தடைக் கல்லானது. கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாமல் திணறினார்.

கனிமொழியின் நிலையை அறிந்த, பெரம்பலுாரின் அப்போதைய கலெக்டர் தாரேஷ்அஹமது, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கி உதவினார். மாணவியின் தந்தை பிச்சைமணி, கூலி வேலைக்கு சென்றும், கடன் வாங்கியும், மகளின் படிப்புக்கு, கட்டணம் செலுத்தி வருகிறார்.இருப்பினும், மாணவி கனிமொழி, விடுமுறை நாட்களில், விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், மருத்துவ படிப்பை தொடர முடியுமா... என்ற கவலை, கனிமொழிக்கு ஏற்பட்டுள்ளது.
அவர் கூறியதாவது: வரும் பிப்ரவரி மாதம், இறுதித் தேர்வு நடக்க உள்ள நிலையில், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணங்களை செலுத்த முடியாமல் சிரமப்படுகிறேன். எப்படியாவது டாக்டராகி, மக்களுக்கு சேவை ஆற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.கனிமொழியின் மருத்துவ கனவுக்கு உதவ விரும்புவோர், 95247- 05879 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
15-செப்-201818:35:03 IST Report Abuse
நெல்லை மணி, இவ்வளவு மதிப்பெண் எடுத்த ஒரு ஏழை மாணவிக்கு ஏன் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கொடுக்கவில்லை. அரசு மக்களுக்காகவா அல்லது தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகளுக்காகவா? பெற்றோரின் வருமானத்தை வைத்தும் இட ஒதுக்கீட்டு செய்ய வேண்டும். அரசு உதவித்தொகை வழங்கவேண்டும். அப்போதுதான் ஏழை மாணவர்களின் கனவு நிஜமாகும். இந்த மாணவியை போன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவேண்டியது அரசின் கடமை.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201817:10:39 IST Report Abuse
Malick Raja மையம் தத்து எடுத்து கமலஹாசன் நேரடியாக அழைத்து உதவி செய்துவிட்டார் இனி இப்பெண்மணி டாக்டரே ...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-செப்-201815:58:44 IST Report Abuse
Endrum Indian நானும் பல தடவை சொல்லியாகி விட்டது இந்த கருத்து மன்றத்தில், தனியாக இது எந்த அளவுக்கு உண்மை என்று உதவி செய்திட நினைக்கும் பலருக்கு தெரிவதில்லை. ஆகவே தினமலர் இந்த மாதிரி நிஜமாகவே படிக்க பணக்கஷ்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்றால் ஒரு "தினமலர் குழந்தைகள் படிப்பு உதவி அக்கௌன்ட்" தொடங்கி அந்த அக்கௌன்ட் விவரம் தெரிவித்தால் உதவி செய்ய எண்ணம் கொண்ட அனைவரும் (உள்மாநிலம், வெளிமாநிலம், வெளிநாடு) அந்த அக்கவுண்டுக்கு எளிதாக பண பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும். உதவி தேவைப்பட்டவர்கள் தினமலரை நேராக தொடர்பு கொள்ளலாம் அல்லவோ இப்படி செய்தால்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X