கம்பம் வனத்துறை அதிகாரிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் வனத்துறை அதிகாரிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

Updated : செப் 12, 2018 | Added : செப் 11, 2018
Advertisement
கம்பம் வனத்துறை அதிகாரிக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

தேனி: தேசிய வன தியாகிகள் தினமான நேற்று, ஒடிசா மாநிலம், பிரிஸ்டைன் கடற்கரையில், மணற்சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக், கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி இறந்த, தேனி மாவட்ட, ஐ.எப்.எஸ்., அதிகாரி மணிகண்டனுக்கு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 46. கடந்த, 1993ல் வேளாண்துறை பட்டப்படிப்பும், பின், அதே துறையில் மேற்படிப்பு, டாக்டர் பட்டம் பெற்றார். கடந்த, 2001ல் கர்நாடக மாநில, ஐ.எப்.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.

அங்கு நாகர்கோலே புலிகள் சரணாலய கள இயக்குனராக பணியாற்றியபோது, மார்ச், 3 ல், கபினி ஆறு ஓடும், கானகோட்டே பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க குழுவினருடன் சென்றார்.

எதிர்பாராத விதமாக, இரண்டு யானைகள், குழுவினரை தாக்கின. இதில், மணிகண்டன் ஒற்றை யானையால் துாக்கி வீசப்பட்டு பலிஆனார். அவரது பணிகளை பாராட்டி, தேசிய வன தியாகிகள் தினமான நேற்று, ஒடிசா மாநிலம் பிரிஸ்டைன் கடற்கரையில், அவரது உருவ மணல்சிற்பத்தை, பத்மஸ்ரீ விருது பெற்ற, மணற்சிற்ப கலைஞர், சுதர்சன் பட்நாயக் செய்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X