தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை : கல்நெஞ்சக்கார தாய் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை : கல்நெஞ்சக்கார தாய் கைது

Added : செப் 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
தண்ணீரில் மூழ்கடித்து சிறுமி கொலை : கல்நெஞ்சக்கார தாய் கைது

திருப்பூர்: கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்து, இரண்டரை வயது பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாயை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 24; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி தமிழ் இசக்கி, 21; பனியன் தொழிலாளி. இவர்களுக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்கு செல்வதால், அருகே வசிக்கும் நாகராஜ் தாய், குழந்தையை பார்த்து கொள்வார். கடந்த, 9ம் தேதி இரவு வேலை முடிந்து, நாகராஜ் வீடு திரும்பினார்.
அதிர்ச்சி : அப்போது, குழந்தை மயக்க நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து, மங்கலம் போலீசார் விசாரித்தனர்.அதில், குழந்தையின் தாயான, தமிழ் இசக்கியின் பதில்கள், முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர் விசாரணையில், குழந்தையை தண்ணீர், 'டிரம்'மில், மூழ்கடித்து கொலை செய்தது தெரிந்தது. இதனால், அவரை போலீசார், நேற்று காலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தொடர்பு : போலீசார் கூறியதாவது:நாகராஜுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், தமிழ் இசக்கி, மனமுடைந்தார். அதனால், குழந்தையை கொலை செய்து, தானும் தற்கொலை செய்யும் முடிவெடுத்தார். 9ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முதலில், குழந்தையை, தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றுஉள்ளார். அப்போது, நாகராஜ், வீட்டுக்கு வந்து விடவே, தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். இந்த விவகாரத்தில், வேறு ஏதாவது காரணம் உள்ளதா... என்ற கோணத்திலும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X