இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.47 லட்சம் வழங்கியது ரயில்வே தீர்ப்பாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.47 லட்சம் வழங்கியது ரயில்வே தீர்ப்பாயம்

Added : செப் 11, 2018
Advertisement

சென்னை:பரங்கிமலை ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும், ரயில்வே தீர்ப்பாயம், 47.69 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு, ஆக., 24ல் இயக்கப்பட்ட ரயிலில், படியில் தொங்கியபடி பயணம் செய்த ஐந்து பயணியர், பரங்கிமலை ரயில் நிலைய பிளாட்பார சுவரில் மோதிய விபத்தில், இறந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயம்அடைந்தனர்.
சேத்துப்பட்டில் இயங்கி வரும் ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம், இந்த விபத்து குறித்து, தானாக வழக்கு பதிந்து விசாரித்தது.
இதில், விபத்தில் இறந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கு, தலா, 8 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்தோருக்கு, தலா, 2 லட்சம் ரூபாய், வழங்க வேண்டும் என, ரயில்வேக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நேற்று, இந்தியன் ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி கண்ணன், இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கினார்.ரயில் விபத்தில் இறந்த, ஐந்து பேரின் குடும்பத்திற்கு, தலா, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த, நான்கு பேருக்கும், மொத்தம், 7.69 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X