திருடன் கைது; 130 சவரன் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடன் கைது; 130 சவரன் மீட்பு

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆலந்துார்:வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்தவனை, நேற்று கைது செய்த போலீசார், 130 சவரன், 2.25 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

தென் சென்னை பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில், வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.இது குறித்து, ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர், முரளி தலைமையிலான தனிப்படை போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, ஆதம்பாக்கத்தில் நடந்து சென்ற, வேலவன், 45, என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர், மொபைல் போனை பறித்து சென்றான். இது குறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவன், ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த மதன்குமார், 29, என்பதும், இரண்டு ஆண்டுகளாக, கோடம்பாக்கத்தில் தங்கி, தென் சென்னை பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து, திருடி வந்ததும் தெரிந்தது.அவனிடம் இருந்து, 130 சவரன் நகைகள் மற்றும் 2.25 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. நேற்று காலை கைது செய்யப்பட்ட மதன்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், குற்றவாளியை கைது செய்து, நகைகளை மீட்ட, தனிப்படை போலீசாரை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X