தொடர் மின்வெட்டால் மக்கள்... அவதி! தொழில் கூடங்களில் உற்பத்தி பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

தொடர் மின்வெட்டால் மக்கள்... அவதி! தொழில் கூடங்களில் உற்பத்தி பாதிப்பு

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அறிவிக்கப்படாத தொடர்
மின் வெட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தின், பிரதான நகரமாகவும், வர்த்தக நகரமாக உள்ளது கள்ளக்குறிச்சி. பெருநகரமாக வளர்ந்து வரும் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக உருவாக்க ஏதுவாக மின்வாரியம், சுகாதாரத்துறைகளில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு
வருகிறது.
இந்நகரையொட்டி உள்ள கோமுகி, மணிமுக்தா அணைகள் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதன் உதவியுடன் நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட அதிநவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும் தொழிற்கூடங்கள், கல்விச்சாலைகள் நிறைந்து கள்ளக்குறிச்சி முக்கியத்துவம் வாய்ந்து வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத பல மணி நேர தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இரவு பகல் நேர வித்தியாசமின்றி நாளொன்றுக்கு 4:00 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் மின்சாரம் எப்போது போகும் எனத்தெரியாமல் விவசாயம் மட்டுமின்றி மின் வசதியை ஆதாரமாக கொண்ட தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் தரப்பு மக்களும் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர். மின்வெட்டால் நவீன அரிசி ஆலைகளில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, விழுப்புரம் மாவட்ட ஆட்டோ சப்-ஸ்டேஷன் எனும் லோடு டெஸ்பேட்ச் சென்டரில் அறிவிக்கப்படும் தகவலுக்கு இணங்க நாங்கள் இங்கு மின் நிறுத்தம் செய்கிறோம். ஏன் நிறுத்தச் சொல்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது எனக்கூறினர்.
தமிழகம் தற்போது மின் மிகை மாநிலமாக உள்ளது எனவும், காற்றாலை மின் உற்பத்தியும் உச்சத்தில்தான் உள்ளது எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்படும் பல மணி நேர அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X