லாரி மோதி 6 பேர் பலியான வழக்கு டிரைவருக்கு 6 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி 6 பேர் பலியான வழக்கு டிரைவருக்கு 6 ஆண்டு சிறை

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் இறந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
சென்னை, பெருங்களத்துாரை சேர்ந்தவர் சுந்தரம்,54; இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி, தனது மகன் ரமேஷிற்கு, தஞ்சை மாவட்டம் கரும்பூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்தார். அன்று மாலை தனது உறவினர்களுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை உறவினர் ராமச்சந்திரன் ஓட்டினார்.
அன்று நள்ளிரவு 12:30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுந்தரம், சுசிலா, பத்மா, பாப்பா, ராமசந்திரன், ஆகாஷ் ஆகியோர் இறந்தனர்.இதுகுறித்து, எடைக்கல் போலீசார், லாரி டிரைவரான வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த மகாதேவன் மகன் தாமோதரன்,28; என்பவரை கைது செய்து, அவர் மீது உளுந்துார்பேட்டை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X