பரிதவிப்பு * தண்ணீருக்கு தினமும் ரூ.300 செலவு * திருப்பாலைக்குடியில் மக்கள் தொடர்ந்து| Dinamalar

தமிழ்நாடு

பரிதவிப்பு * தண்ணீருக்கு தினமும் ரூ.300 செலவு * திருப்பாலைக்குடியில் மக்கள் தொடர்ந்து

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பாலைக்குடி:ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி கடற்கரை கிராமத்தில் குடிநீர் இல்லாததால், தண்ணீருக்கு தினமும் 300 ரூபாய் செலவு செய்யும் அவல நிலையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் திருப்பாலைக்குடி ஊராட்சி உள்ளது. கடற்கரை கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கிராமத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் அலையும் நிலை உள்ளது. மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர் பகுதியில் மக்கள் தண்ணீருக்காக பரிதவித்து வருகின்றனர்.
திருப்பாலைக்குடி கிராமத்திற்கு காவிரி கூட்டு குடி நீர் திட்டம் மூலம் சோழந்துார் பகுதியில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து வழங்கப்பட வேண்டும். இந்த தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் 15 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு குடும்பத்திற்கு 2 முதல் 4 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது.
குடம் 10 ரூபாய்:
இப்பகுதிக்கு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து டிராக்டர், டேங்கர் லாரி மூலம் வரும் குடிநீர் குடத்திற்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் தினமும் விலைக்கு வாங்கியே தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு தண்ணீருக்கு மட்டும் 300 ரூபாய் செலவிடும் நிலை உள்ளது.
கிணறுகளில் உவர்ப்பு நீர்:
கடற்கரைப்பகுதிகளில் குடிநீருக்காக உறை கிணறுகள் 30, ஆயிரம் ரூபாய் மதிப்பில் 3 லட்சம் ரூபாய்க்கு கிணறுகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாத நிலையில் ஊற்று நீர் உவர்ப்பாக மாறி பயன்பாட்டிற்கு பயன்படாமல் போய்விட்டது. இதன் காரணமாக 10 உறை கிணறுகளும் பாழடைந்துள்ளது.
நடவடிக்கை இல்லை:
குடிநீர் குறித்து கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.ஊராட்சி நிர்வாகத்தில் முன்பு தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள்
இருந்ததால், குடி வினியோகிக்க நடவடிக்கை எடுத்தனர்.தற்போது அதிகாரிகள் மட்டுமே இருப்பதால், மக்கள் புகார் செய்தாலும் அலட்சியம் காட்டுகின்றனர்.

விஜயராணி, காந்தி
நகர்:

கடற்கரை கிராமம் என்பதால், அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளனர். தினமும் ஒரு குடும்பத்திற்கு தண்ணீருக்கு மட்டும் 300 ரூபாய் செலவிடுகிறோம். தினமும் கடலில் மீன் பிடிக்கும் தொழிலில் கிடைக்கும் வருமானம் 500 ரூபாய், அதில் தண்ணீருக்கு 300 ரூபாய் செலவிட்டால், நாங்கள் எப்படி வாழ முடியும், என்றார்.
அழகு மீனா:
கடற்கரைப்பகுதியில் உறைகிணறுகள் 10 இடங்களில் அமைத்தனர். நிலத்தடி நீர் இல்லாததால், கடல் நீர் புகுந்து உவர்ப்பு நீராக மாறிவிட்டது. அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் அரை மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தெருக்குழாயில் ஒரு குடும்பத்திற்கு 4 குடம் மட்டுமே கிடைக்கும் இதனை வைத்து 20 நாட்கள் எப்படி சமாளிக்க முடியும், என்றார்.
கீதா:
திருப்பாலைக்குடி ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் செய்தும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் இல்லாமல் விலைக்கு வாங்கி பயன் படுத்தி வருகிறோம். தண்ணீரை சேமித்து வைத்தால், சுகாதாரத்துறையில் இருந்து வருபவர்கள் இப்படி தண்ணீர் சேமித்தால் டெங்கு காய்ச்சல் பரவும், என குடிநீரை கீழே கவிழ்த்து விடுகின்றனர். குடிநீர் வினியோகம் இல்லை, என்றார்.
செல்லத்துரை,ஊராட்சி உதவி இயக்குனர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. திருப்பாலைக்குடிக்கு உவர்ப்பு நீரை நன்னீராக மாற்றும் பிளான்ட்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நிறுவப்பட்டு சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும். கிராம மக்கள் பங்களிப்புடன் உறை கிணறு அமைத்து ஆழ்துளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X