மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:கோட்ட அளவிலான, மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாமில், 50 பேர், பல்வேறு உதவி கேட்டு விண்ணப்பித்தனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கோட்ட அளவிலான, மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மாற்றுத்திறனாளிகள் வங்கி கணக்கு துவங்க, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.வருவாய்த்துறையினர், மாற்றுத்திறனாளிகள் விவரங்களை பெற்று, தேவையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் நல உதவி விவரங்கள் தெரிவித்தனர்.திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகாக்களை சேர்ந்த, மாற்றுத்திறனாளிகள், முகாமில் பங்கேற்று, விண்ணப்பித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், தனி துணை தாசில்தார் ராகவேந்திரன், தனி தாசில்தார்கள் வெங்கடலட்சுமி, சாந்தி, கனிமொழி உள்ளிட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். உதவித்தொகை கேட்டு, 15 பேர், கடனுதவி கேட்டு, 22 பேர், பெட்டிக்கடை கேட்டு, நான்கு பேர் உட்பட, 50 பேர் விண்ணப்பித்தனர். சப்-கலெக்டர் ஷ்ரவன் குமார், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாம் நிறைவாக, சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. காது கேட்கும் கருவி உட்பட உதவி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X