எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ. திருமணம் மீண்டும் நிறுத்தம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (12)
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர், எம்.எல்.ஏ., திருமணம், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன், 42. இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், இன்று திருமணம் நடப்பதாகவும், முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்வதாகவும் இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், திடீரென மாயமானதால், திருமண விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும், அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, அ.தி.மு.க.,வினர் தரப்பில், தீவிர பெண் வேட்டை நடந்தது.
இந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ., தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை.திருமணம் நடக்கவுள்ள, பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் தரப்பினர் கூறுகையில், இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X