20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது வேன்: டிரைவர் பலி; 14 மாணவர்கள் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது வேன்: டிரைவர் பலி; 14 மாணவர்கள் காயம்

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆத்தூர்: கல்வராயன்மலையில், தனியார் பள்ளி வேன், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் பலியானார். 14 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆத்தூர் அடுத்த, கல்வராயன்மலை, கருமந்துறையில், பிரபாவதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு, கருமந்துறை மட்டுமின்றி, விழுப்புரம், வெள்ளிமலை ஒன்றிய மலை கிராம மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று, மாவடிப்பட்டு, கொடுந்துறை, மொட்டையனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மூன்று மாணவியர், 11 மாணவர்கள், பள்ளி வேனில் வந்துகொண்டிருந்தனர். கருமந்துறை - கொடுந்துறை நெடுஞ்சாலையில், மொட்டையனூர் பிரிவு சாலை அருகே, முன்சக்கர, 'ஆக்சில்'(அச்சு இணைப்பு) கட்டாகி கழன்று ஓடியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரமுள்ள, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இந்நாடு கிராமத்தைச் சேர்ந்த, டிரைவர் வெங்கடேசன், 38, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வேனிலிருந்த மாணவ, மாணவியர் காயமடைந்தனர். அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், மாவடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று, சிகிச்சை அளித்தனர். மக்கள், 'இழுவை திறனில்லாத தரமற்ற வாகனம் இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, குறையிருந்தால், போக்குவரத்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், கருமந்துறை, கரியாலூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர். விபத்து குறித்து, கரியாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X