மோட்டார் வாகன ஆய்வாளரின் புரோக்கர் கைது: ரெய்டில் 100 பவுன், ஆவணங்கள் சிக்கின| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் வாகன ஆய்வாளரின் புரோக்கர் கைது: ரெய்டில் 100 பவுன், ஆவணங்கள் சிக்கின

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆத்தூர்: லஞ்ச வழக்கில் கைதான, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புரோக்கராக செயல்பட்ட ஆத்தூரை சேர்ந்த, 'ஜோதிடர்' செந்தில்குமாரின் வீட்டில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து, 100 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு. நேற்று, முத்துக்குமார் என்பவரிடம், நான்கு சக்கர வாகனத்துக்கு தகுதி சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், பாபுவை கைது செய்தனர். கடலூர், செம்மண்டலம் பகுதியிலுள்ள பாபுவின் வீட்டில் இருந்து, 36 லட்சம் ரூபாய், தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்தூர், எல்.ஆர்.சி., நகரை சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவர் பாபுவுக்கு புரோக்கர் மட்டுமின்றி, பினாமியாகவும் இருப்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை, 5:00 மணியளவில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையிலான போலீசார், செந்தில்குமாரின் வீடு, வணிக வளாகம், ஜோதிடர் நிலையங்களில் ஆய்வு செய்தனர். வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: கடந்த, 2006ல், ஆத்தூரில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்த பாபு, பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் சென்றது. அதன்படி, அப்போது நடந்த சோதனையில், புரோக்கர் செந்தில்குமார் வீட்டிலிருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாபு, மனைவி மங்கையர்கரசி மீது, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. லஞ்சம் வாங்குவதை நிறுத்தாத பாபு, புரோக்கர் செந்தில்குமார் உதவியுடன் மீண்டும் சொத்து சேர்த்துள்ளார். செந்தில்குமார் சமீபத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், தர்ம ஞான இல்லம் என்ற மூன்று அடுக்கு மாடி வீடு, வணிக வளாகம் என, 5,000 சதுர அடியில் புதிதாக கட்டியுள்ளார். நிதி நிறுவனம், பள்ளிகளில் பங்குதாரராக உள்ளார். இவரது வீட்டிலிருந்து, 15 வங்கிகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 100 பவுன் நகை, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X