ஆடு திருடிய ஜோசியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடு திருடிய ஜோசியர் கைது

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரூர்: ஏ.கே.தண்டாவில் ஆட்டை திருடிச் சென்ற, கிளி ஜோசியரை போலீசார், நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, ஏ.கே.,தண்டாவைச் சேர்ந்தவர் கணேசன், 55, விவசாயி. இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு, ஒரு வெள்ளாடு திருடு போனது. ஆட்டை தேடிச் சென்ற கணேசன், சிட்லிங் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, வாலிபர் ஒருவர் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், ஆட்டைக் கொண்டு சென்றார். அவரை பிடித்து, கோட்டப்பட்டி போலீசில் கணேசன் ஒப்படைத்தார். விசாரணையில், அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மாணிக்கம், 22, என்பதும், சிட்லிங் பகுதியில், கிளி ஜோசியம் பார்த்தது வந்ததும், தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X