தேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்தலுக்காக காசு: விநாயகருக்கு மவுசு

Added : செப் 12, 2018 | கருத்துகள் (13)
Advertisement
விநாயகர் சதுர்த்தி, ஐதராபாத், தெலுங்கானா சட்டசபை தேர்தல், விநாயகர் சதுர்த்தி செலவு, அரசியல்வாதிகள், தெலுங்கானா, லாலாபேட் கணேஷ் உத்சவ் சமிதி, விநாயகர் சிலை, 
Vinayagar Chaturthi, Vinayagar Statue, Hyderabad, Telangana assembly election, Vinayagar Chaturthi spending, politicians, Telangana, Lalabat Ganesh Utsav Samiti,

ஐதராபாத்: தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஐதராபாத் நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பந்தல்களுக்கு அரசியல்வாதிகள் ஓடோடி சென்று பணம் கொடுத்து வருகின்றனர்.


16,000 பெரிய பந்தல்கள்

ஐதராபாத் நகரில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 16,00 பெரிய பந்தல்களிலும், 30,000 சிறிய பந்தல்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு விநாயகர் சிலை அமைத்து, போலீஸ் அனுமதி, தற்காலிக மின் இணைப்பு பெற்று, விநாயகர் சிலை கரைப்பு நாள் வரை தினமும் பூஜை செய்ய, ஒரு பந்தலுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் செலவாகும்.

விநாயகர் சிலை வைக்கும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் வீடுகளில் பணம் வசூலித்து தான் இந்த செலவை மேற்கொள்வார்கள். தற்போது சட்டசபை தேர்தல் வருவதால், விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் அரசியல்வாதிகள் ஓடோடி வருகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்க எவ்வளவு செலவானது என கேட்டு, தற்போது அந்த தொகையை தரவும் முன் வருகின்றனர். இந்த முயற்சியில், இடதுசாரி கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.தேடி வரும் அரசியல்வாதிகள்

லாலாபேட் கணேஷ் உத்சவ் சமிதி என்ற அமைப்பை சேர்ந்த பிரவீன் என்பவர் கூறுகையில், ' ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைக்க, இளைஞர்கள் நன்கொடை கேட்டு வீதி தோறும் அலைவார்கள். தற்போது ஆட்சி கலைப்பு அறிவிப்பு வந்த நாள் முதல், அனைத்து கட்சிகளில் இருந்தும் எங்களை அணுகி, விநாயகர் சிலை வைக்க எவ்வளவு செலவாகும் என கேட்கின்றனர். அந்த தொகையை தர பலரும் முன் வருகின்றனர்' என்றார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X