மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மக்களுக்கு அவதி: மாநிலங்களுக்கு அட்சய பாத்திரம்

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (26)
Advertisement
பெட்ரோல் விலை உயர்வு , டீசல் விலை உயர்வு ,வரி வருவாய், பெட்ரோல், டீசல், மாநில அரசுகள்,  கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,  
Petrol price hike, diesel price hike, tax revenue, petrol, diesel, state governments, crude oil, USD, rupee value, petrol diesel price hike,

புதுடில்லி: தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு தான் அவதியாக உள்ளது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டில் ரூ.22,700 கோடி வரி வருவாய் தரும் அளவுக்கு மாநில அரசுகளுக்கு அட்சய பாத்திரமாக உள்ளது.ஆய்வு அறிக்கை சொல்வது என்ன

எஸ்.பி.ஐ.,யின் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73ஐ எட்டும் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 78 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி வருவாயை அளிக்க உள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை தாண்டி ரூ.22,700 கோடி அளவுக்கு மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில், ஒரு டாலர் உயர்கிறது என்றால், முக்கியமான 19 மாநில அரசுகளுக்கு ரூ.1,513 கோடி வருவாய் கிடைக்கும்.முதல் இடத்தில் மகாராஷ்டிரா

கூடுதல் வருவாய் பெறும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநில அரசுக்கு ரூ.3,389 கோடி ரூபாய் கிடைக்கும். அடுத்தாக, குஜராத் மாநிலத்திற்கு ரூ.2,842 கோடி கிடைக்கும். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு, ஒரு லிட்டருக்கு 39.12 சதவீத வாட் விதிக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக குஜராத் மாநிலத்தில், ஒரு லிட்டருக்கு 16.66 சதவீத வாட் விதிக்கப்படுகிறது.குறைத்தாலும் பாதிப்பு இல்லை

மகாராஷ்டிரா, ம.பி., பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் உள்ளது. அம்மாநிலங்களில் பெட்ரோல் விலையில், ரூ.3, டீசல் விலையில், ரூ.2.50 குறைக்க முடியும். மாநில அரசுகள் கச்சா எண்ணெய் விலை, போக்குவரத்து செலவு மற்றும் கமிஷன் ஆகியவை மட்டும் அடங்கிய அடிப்படை விலை மீது வாட் விதித்தால், லிட்டருக்கு டீசல் விலையில் ரூ.3.75, பெட்ரோல் விலையில், ரூ.5.75 குறையும். ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


இவ்வாறு அந்த அறிக்கை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X