தமிழகத்தில் மின்வெட்டு:அமைச்சர் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு:அமைச்சர் விளக்கம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
மின்வெட்டு, அமைச்சர் தங்கமணி,

சென்னை: அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிச்சயமாக மின்வெட்டு இல்லை. எந்த காலத்திலும் ஏற்படாது. காற்றாலை மின்சாரம் குறைந்துவிட்டதால் ஒரிரு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. சென்னையில் 5 நிமிடம் மின்வெட்டு இருந்தால் நான் பொறுப்பேற்கிறேன். மின்துறையில் ஊழல் என்றால், எந்த விசாரணையையும் சந்திக்க தயார். மின்துறையில் எந்தவித அரசியல் தலையீடு இல்லாமல் பணியிட மாறுதல் நடக்கிறது. சாமானியரின் சிறப்பான ஆட்சியை ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. யாரோ எழுதி கொடுத்த அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.மின்வெட்டு என்பதை கண்டுபிடித்ததே திமுக தான். திமுக ஆட்சியில் 18 மணி நேர மின்வெட்டு இருந்தது. மின்வெட்டு இருந்ததை அப்போது அமைச்சராக இருந்தவர் ஒப்பு கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X