Air Force Chief Justifies Government's Decision To Buy 36 Rafale Jets | ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரபேல் போர் விமானங்கள்,  விமானப்படை தளபதி, தன்னவோ

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் நமது பலம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்

டில்லியில் விமானப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில், தனோவா பேசியதாவது: உலகில் வேறெந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு நமக்கு, இரண்டு அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அணு ஆயுதம் உள்ள சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, நம் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நம் விமானப் படைக்கு, தலா, 16 - 18 போர் விமானங்கள் உடைய, 'ஸ்குவாட்ரன்' எனப்படும், படைப் பிரிவுகள், 42 தேவை. ஆனால் தற்போது, 31 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளன. இந்தப் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும், படையை வலிமைபடுத்தவும், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களும், ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன. இதற்கு முன்னும், இவ்வாறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Robet - chennai,இந்தியா
13-செப்-201808:05:01 IST Report Abuse
A.Robet கிறிஸ்துவ வேதாகமத்தின் படி ரபேல் என்றால் குணமளிக்கும் கடவுளின் தூதர் நமது நாட்டுக்கு தேவை தான் அதன் விலை என்ன என்பதுதான் கேள்வி அதை மத்திய அரசு வெளிப்படையாக சொல்லிவிட்டால் போதும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:01:18 IST Report Abuse
Srinivasan Kannaiya ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா,,அனால் இதுவரை நிரூபணம் ஆகவில்லையே... நாம் எங்கெங்கே உபயோகித்தோம்...
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
13-செப்-201805:59:27 IST Report Abuse
VOICE Rafel விமானப்படைக்கு தேவை தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சிரியா ISS போரின் போது அதன் முழு பலம் காணமுடிந்தது. ஆனால் நம் நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அதை வைத்து கமிசன் அடித்தல் நாட்டின் சாபக்கேடு. இந்தியாவுன் மிக முக்கிய சாபக்கேடு லஞ்சம் அது ஒழியாதவரை இந்திய வளர வாய்ப்பு இல்லை, மீடியாவில் வெறுமென சொல்லிகொள்ளலாம் வளருகிறது என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X