Air Force Chief Justifies Government's Decision To Buy 36 Rafale Jets | ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் போர் விமானங்களால் பலம் அதிகரிக்கும்: தனோவா

Updated : செப் 12, 2018 | Added : செப் 12, 2018 | கருத்துகள் (12)
Advertisement
ரபேல் போர் விமானங்கள்,  விமானப்படை தளபதி, தன்னவோ

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்குவதன் மூலம் நமது பலம் அதிகரிக்கும் என இந்திய விமானப்படை தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்

டில்லியில் விமானப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இதில், தனோவா பேசியதாவது: உலகில் வேறெந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு நமக்கு, இரண்டு அண்டை நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அணு ஆயுதம் உள்ள சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, நம் படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நம் விமானப் படைக்கு, தலா, 16 - 18 போர் விமானங்கள் உடைய, 'ஸ்குவாட்ரன்' எனப்படும், படைப் பிரிவுகள், 42 தேவை. ஆனால் தற்போது, 31 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளன. இந்தப் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும், படையை வலிமைபடுத்தவும், பிரான்சிடம் இருந்து, 36 ரபேல் போர் விமானங்களும், ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன. இதற்கு முன்னும், இவ்வாறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X