பக்க வாத்தியம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பக்க வாத்தியம்


'கராத்தே' போட்ட பிள்ளையார் சுழி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், சென்னை, சேப்பாக்கத்தில் நடந்தது. தென் சென்னை மாவட்ட, காங்., தலைவர் கராத்தே தியாகராஜன், 'தி.மு.க., நடத்தும் கூட்டங்கள், போராட்டங்களில், காங்கிரசின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களோ அல்லது எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களோ வருவதில்லை' என்றார்.

அவரது பேச்சிற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை தொடர்ந்து பேச விடாமல் தடுத்தனர். மேடையில் அமர்ந்திருந்தோர், அவரை சமாதானப்படுத்தி, அமர வைத்தனர்.

காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், 'காங்கிரசுக்கும் சூடு, சொரணை இருக்குன்னு, கராத்தே தியாகராஜன், பிள்ளையார் சுழி போட்டுருக்காரு... இனியாவது, காங்கிரசின் மூத்த தலைவர்கள், அவர் பேச்சுக்கு ஆதரவு தந்தால், தமிழக காங்கிரஸ் உருப்படும்' எனக் கூற, மற்றவர்கள், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201805:38:26 IST Report Abuse
Bhaskaran ஆனால் காங்கிரசின் பெருந்தலைகளுக்கு எதுவும் கிடையாது அவர்களுக்குத்தேவை சில ச.ம. உ. ,நா. உ மட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X