டீ கடை பெஞ்ச்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டீ கடை பெஞ்ச்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டீ கடை பெஞ்ச்


இன்ஸ்பெக்டர்களிடம், ஏ.சி., நடத்திய தங்க வேட்டை!

''முதல் கட்ட பட்டுவாடாவை முடிச்சுட்டாங்க...'' என, வாயை திறந்தார் அந்தோணிசாமி.

''இடைத்தேர்தல் விஷயமா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம்... திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கலை... ''ஆனா, அ.தி.மு.க.,வுல, திருப்பரங்குன்றம் தொகுதியில, வட்ட, பகுதி செயலர்களுக்கு, தலா, 10 ஆயிரம், பூத் கமிட்டிக்கு, 5,000 ரூபாயை, மாவட்டச் செயலரான ராஜன் செல்லப்பா, பட்டுவாடா பண்ணிட்டாருங்க...

''அடுத்து, வட்ட, பகுதி, கிளை அளவுல, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதும், பட்டுவாடா செய்யப்படும்னு உற்சாக டானிக்கும் குடுத்திருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''நகராட்சி கமிஷனர் பொறுப்பை, உடும்பா பிடிச்சிட்டு இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு நகர்ந்தார் அண்ணாச்சி.

''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''புதுக்கோட்டை, தேனி அல்லிநகரம் நகராட்சிகள்ல, அஞ்சு வருஷத்துக்கும் மேலா, கமிஷனர்களே இல்லை... பொறியாளர்கள் தான், பொறுப்பு கமிஷனர்களா இருக்காவ வே... ''அல்லிநகரத்துல இருக்குற ராஜாராம், துணை முதல்வர் பன்னீரின் ஆதரவுல இருக்காரு... இவருக்கு சமீபத்துல, 'டிரான்ஸ்பர்' போட்டுட்டாவ... ''ஆனா, துணையின் தயவுல, பத்தே நிமிஷத்துல, அந்த ஆர்டரை ரத்து பண்ணிட்டு, அங்கனயே டேரா போட்டிருக்காரு வே...

''இதே மாதிரி தான், புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியனும், அஞ்சு வருஷமா பொறுப்பு கமிஷனரா இருக்காரு... இவருக்கும் மேலிடத்தின் ஆசி இருக்காம் வே...'' என்றார் அண்ணாச்சி.

''எல்லாரும், 1 சவரன் தரணும்னு கறாரா கேட்டு வாங்கிட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னையில, போக்குவரத்து புலனாய்வு பிரிவுல, உதவி கமிஷனரா இருக்கறவரின் மகள் திருமணம், சமீபத்துல நடந்தது... ''ஏ.சி., தன் கட்டுப்பாட்டுல இருக்கற இன்ஸ்பெக்டர்கள் எல்லாரும், தலா, 1 சவரன் நகை அன்பளிப்பா குடுத்துடணும்னு, கண்டிப்பான உத்தரவு போட்டு இருக்கார் ஓய்...

''இன்ஸ்பெக்டர்கள், தங்களுக்கு தெரிஞ்ச வக்கீல்களிடம் கேட்டிருக்கா... சில வக்கீல்கள் மட்டும் குடுத்தா... ''மத்த இன்ஸ்பெக்டர்கள், கைக்காசை போட்டு, நகை வாங்கி குடுத்துட்டா... 'மாசா மாசம், மாமூலையும் கரெக்டா வாங்கிடறார்... அப்பறமும், கல்யாணம், காது குத்துன்னு படுத்தி எடுக்கறாரே'ன்னு புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சரிங்க... ராஜசேகரன் வீட்டுல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... கிளம்பறேன்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201807:13:09 IST Report Abuse
Bhaskaran மாவட்டசெயலாளர் பதவி நிலைக்கும் வரும் தேர்தலில் எம். எல்.எ.சீட்கேட்கிறவங்ககிட்டே வசூல்பண்ணிக்கொள்ளலாம் ennum தைரியம்
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201804:16:14 IST Report Abuse
uthappa மக்கள் பணத்தாசை பிடித்து அலையும் போது தேர்தலில் நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பது குதிரை கொம்புதான்.இதில் மொத்தமாக கருத்து மட்டும் கரித்து கொட்டுவார்கள்.காசை கொடுத்தால் அடங்கி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X