எதிர்க்கட்சிகள் பிரசாரம் எடுபடாது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் பிரசாரம் எடுபடாது

Added : செப் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எதிர்க்கட்சிகள் பிரசாரம் எடுபடாது

சென்னை: ''எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாது,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வரும், 30ல், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா நடக்க உள்ளது. இதற்கு பந்தல் அமைப்பதற்காக, நேற்று கால்கோள் விழா நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
பின், அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி: உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி, 'என் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தயார்; தவறு செய்ததை நிரூபித்தால், பதவி விலக தயார்' என, சவால் விடுத்துள்ளார். அதை, தி.மு.க., ஏற்றுக் கொள்ள வேண்டும்.சென்னை மாவட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில், முதல்வர் அறிவிப்பார். எப்போதும், அ.தி.மு.க., தான் ஆளும் கட்சி. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டோக்கன்' செல்வர், 'டோக்கனுக்கு, 10 ஆயிரம் ரூபாய்' என்ற மாயையை ஏற்படுத்தி, குறுக்கு வழியில் வெற்றி பெற்றார். இனிமேல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் என, எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., வெற்றி பெறும். ஏனெனில், மக்கள் பயனடையும் வகையில், நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். சட்டம் - ஒழுங்கு அமைதியாக உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள், எவ்வளவு பொய் பிரசாரம் செய்தாலும் எடுபடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:30:28 IST Report Abuse
Srinivasan Kannaiya 'எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாது,'' ஆமாம் நீஎங்கள் எல்லாம் ரொம்பரொம்ப நல்லவர் என்று சொன்னார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201805:36:36 IST Report Abuse
Bhaskaran மக்கள் நிம்மதியாக வாழுகின்றனர் இது பொய்ப்பிரச்சாரமில்லயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X