'இ - சிகரெட்' தடை: தமிழகத்தில் அமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ - சிகரெட்' தடை: தமிழகத்தில் அமல்

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: தமிழகத்தில், 'இ - சிகரெட்' எனப்படும், 'எலக்ட்ரானிக் சிகரெட்டு'களுக்கு தடை விதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
'தமிழகத்தில், பேட்டரி வாயிலாக இயக்கப்படும், எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும்' என, ஜூன், 14ல், தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இ - சிகரெட்கள் மீதான தடை, உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இ - சிகரெட்டில், 'நிகோடின்' அதிகளவில் இருக்கிறது. இதனால், நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் ஏற்பட அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இ - சிகரெட்களுக்கு தடை விதிக்குமாறு, பொது சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில், இ - சிகரெட் பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்கவும், வருங்காலங்களில் அதிகமானோர், இ - சிகரெட் பயன்படுத்துவதை தவிர்க்கவும், உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதன் உற்பத்தி, விற்பனை, வினியோகம், காட்சிப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், விளம்பரம் போன்வற்றிற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை, பொது சுகாதாரத்துறை, உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடை : மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஆக., 28ல், அறிவுறுத்தல் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'எலக்ட்ரானிக் சிகரெட், எலக்ட்ரானிக் நிகோடின், எலக்ட்ரானிக் சிஷா, சுவையூட்டப்பட்ட குட்கா உள்ளிட்ட அனைத்து பொருட்களின் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தை தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும், இ - சிகரெட்களுக்கு, விரைவில் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X