குறைந்த விலை வீட்டுமனை : கூட்டுறவு சங்கங்கள் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த விலை வீட்டுமனை : கூட்டுறவு சங்கங்கள் திட்டம்

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தமிழகத்தில், நகராட்சி பகுதிகளில், மத்திய அரசு மானியத்துடன், வீட்டு மனைகள் வழங்க, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக, குறைந்த விலையில், வீட்டு மனைகள் வழங்குவதற்காக, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில், தற்போதைய நிலவரப்படி, 750 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நிதி நிலவரம் மோசமானதால், பல்வேறு சங்கங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. அபராத வட்டி தள்ளுபடி உள்ளிட்ட, சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிதி நெருக்கடியில் இருந்து, மீண்டு வரும் சங்கங்கள் வாயிலாக, புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல் படுத்தி வரும், பிரதமரின் வீட்டுவசதி திட்ட சலுகைகள், மக்களுக்கு கிடைக்கும் வகையில், புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, கூட்டுறவு வீட்டுவசதி சங்க வட்டாரம் கூறியதாவது: தமிழகத்தில், நகராட்சி எல்லைக்குள் வரும் பகுதிகளில், புதிய மனைப்பிரிவுகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், மனை வாங்குவதற்கு, 6.5 சதவீத வட்டியில், கடனுதவியும் வழங்கப்படும். இத்துடன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்படி, வட்டி மானிய சலுகையும் கிடைக்கும்.இதற்காக, நிலங்களை தேர்வு செய்யும் பணிகள், அந்தந்த பகுதி கூட்டுறவு சங்கங்களால், விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X