மத்திய தொகுப்பில் ஒதுக்கீடு குறைப்பு: தொடர் நெருக்கடியில் மின் வாரியம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நெருக்கடி!
மத்திய தொகுப்பில் ஒதுக்கீடு குறைப்பு:
தொடர் நெருக்கடியில் மின் வாரியம்

காற்றாலை மின் உற்பத்தி சரிவு, நிலக்கரி தட்டுப்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து, மத்திய மின் நிலையங்களில் இருந்தும், குறைந்த மின்சாரம் வழங்கப்படுவதால், தமிழக மின் வாரியத்திற்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது.

மத்திய தொகுப்பில்,ஒதுக்கீடு,குறைப்பு,தொடர் நெருக்கடி,மின் வாரியம்


மத்திய அரசுக்கு, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில், அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், தமிழகத்திற்கு, தினமும், 6,138 மெகா வாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து, 4,500 மெகாவாட்டிற்கு மேல் வழங்கப்படும்.

நிலக்கரி வரத்து பாதிப்பு :


காற்றாலை சீசன் முடிவடைவதற்கு அவகாசம் இருந்தாலும், தற்போது, அவற்றில் இருந்து, 500 மெகா வாட்டிற்கு கீழ் தான் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், தனக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களில், முழு அளவிற்கு,

மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை, மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஒரு வாரத்திற்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநில சுரங்கங்களில் இருந்து, நிலக்கரி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரமும் குறைக்கப்பட்டுள்ளது.

சிரமம் :


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால், தினமும், 14 ஆயிரம் மெகா வாட்டாக இருந்த மின் தேவை, 12 மெகா வாட்டிற்கு கீழ் குறைந்தது. தற்போது, வெயில் சுட்டெரிப்பதால், பகலில், 13 ஆயிரத்து, 500 மெகா வாட்; காலை, மாலையில், 14 ஆயிரம் மெகா வாட்டிற்கு மேல், மின் தேவை உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வல்லுார்; திருநெல்வேலி, கூடங்குளம்; கடலுார், நெய்வேலியில் உள்ள, மத்திய மின் நிலையங்களில், பழுது, பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து, சராசரியாக, 3,400 மெகா வாட்

Advertisement

மின்சாரம் தான் கிடைக்கிறது. ஏற்கனவே, காற்றாலை மின்சாரமும் சரிந்த நிலையில், மத்திய மின்சாரமும் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிக்க சிரமம் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நியமனம் தாமதம் :

மின் வாரியத்தில், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, இயக்குனர்கள் உள்ளனர். அவர்களே, தங்கள் பிரிவில் நடக்கும் பணிகளின் விபரத்தை, வாரிய தலைவருக்கு தெரிவிப்பர். மின் உற்பத்தி இயக்குனராக இருந்த வேல்முருகன், ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார். புதிய இயக்குனர், இதுவரை நியமிக்கப்படவில்லை. தற்போது, நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால், இயக்குனர் பதவியை, உடனே நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


- நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
13-செப்-201815:47:02 IST Report Abuse

Arasuமின்சார வாரியத்தை பிரைவேட் ஆக்கினால் தான் உருப்படும்..... இல்லை என்றால் நாடு இன்னும் 25 வருஷம் பின்ன போக வேண்டியது தான்...வெளிநாட்டில் மீட்டர் ரீடிங்கை online ல் பார்க்கிறார்கள்...இங்க ...

Rate this:
13-செப்-201813:53:17 IST Report Abuse

ஆப்புஎங்கே போனார் அந்த வேலுமணி? நேத்திதான் தமிழகம் மின்சாரம் உபரி மாநிலம்னு பீலா வுட்டாரே.....

Rate this:
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
13-செப்-201813:20:53 IST Report Abuse

Muthukumaranமின் மிகை மாநிலம் என்று மின் துறையின் துரை சொன்னாரே??? அதுவும் 111 விதி (பட்டை நாமமா??? )

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X