கரும்புச்சக்கையில் விநாயகர் : கல்லூரி மாணவர்கள் புதுமை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்புச்சக்கையில் விநாயகர் : கல்லூரி மாணவர்கள் புதுமை

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கரும்புச்சக்கையில் விநாயகர் : கல்லூரி மாணவர்கள் புதுமை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் வகையில், கரும்புச்சக்கையில் விநாயகர் சிலை செய்து, கோவை, குமரகுரு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், புதுமை படைத்துள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும், இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, பல விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு, பொது மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகின்றன. 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' எனும் ரசாயன பொருளில் செய்யப்படும், விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், களிமண், செய்தித்தாள் கூழ், மாவு போன்ற மூலப் பொருட்களால், சிலை தயாரிக்கப்படுகிறது. இவை, எளிதில் கடலில் கரைந்து, கடல் மாசு ஏற்படுவதை தடுக்கும்.
இந்நிலையில், கோவையில் உள்ள, குமரகுரு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், கரும்புச்சக்கையை பயன்படுத்தி, புதுமையான விநாயகர் சிலையை, கையினால் உருவாக்கி உள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு தயாரிப்புகளை, குமரகுரு கல்லுாரி மாணவர்கள் உருவாக்கி, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர். தற்போது, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத, மன அமைதியை தரும் விழாவாக, விநாயகர் சதுர்த்தி இருக்கும் வகையில், கரும்புச்சக்கையை மூலப்பொருளாக பயன்படுத்தி, விநாயகர் சிலை உருவாக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X