பாக்., மீதான தாக்குதலில் நாயை விரட்ட சிறுத்தை சிறுநீர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்., மீதான தாக்குதலில் நாயை விரட்ட சிறுத்தை சிறுநீர்

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: பாக்., எல்லைப்பகுதி யில் ஊடுருவி, பயங்கர வாதிகளுக்கு எதிராக, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லியத் தாக்குதல் நடத்திய நம் வீரர்கள், நாய்களை அருகில் நெருங்க விடாமல் தடுக்க, சிறுத்தை யின் சிறுநீரை பயன்படுத்திய தகவல், தற்போது தெரியவந்துள்ளது.கடந்த, 2016ல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள யூரி பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 17 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பாக்., எல்லைக்குள், நம் வீரர்கள் அதிரடியாக நுழைந்து, துல்லிய தாக்குதல் நடத்தி, எல்லையோரம் இருந்த பயங்கரவாதி களின் நிலைகளையும், முகாம்களையும் குண்டுகள் வீசி தகர்த்தெறிந்தனர். இந்த தாக்குதலில், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சாத்தியம் : துல்லிய தாக்குதல் நடத்துவதற்கான திட்ட தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய, ராணுவ லெப்டினன்ட் ஜெனரல், ஆர்.ஆர்.நிம்போகர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கடந்த, 2016, செப்., 29ல், இந்திய ராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அடங்கிய குழுவினர், பாக்., எல்லைக்குள் ஊடுருவினர். எல்லையோரம் அமைந்திருந்த, நான்கு முகாம்களையும், நிலைகளையும், நம் வீரர்கள், சிறிது நேரத்தில் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தனர். பாக்., எல்லைக்குள் செல்லும்போது, அங்குள்ள கிராமங்களை சேர்ந்த நாய்கள் குரைத்து, நம் திட்டத்தை கெடுக்கும் சாத்தியம் இருந்தது.
ஓட்டம் : இதை முன்பே எதிர்பார்த்திருந்ததால், சிறுத்தை சிறுநீரை நம் வீரர்கள் எடுத்து சென்றிருந்தனர். நாய்கள், சிறுத்தைகளை பார்த்தால், பயந்து ஒளிந்து கொள்ளக் கூடியவை. எனவே, சிறுத்தையின் சிறுநீரை நுகர்ந்த நாய்கள், இந்திய வீரர்கள் அருகே வராமல், ஓட்டம் பிடித்தன. இதனால், துல்லியத் தாக்குதலை, நம் வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்து, மீண்டும் நம் எல்லைக்குள் திரும்பினர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-செப்-201813:07:06 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த தகவலை வெளியிடுவது தவறு. ரகசியங்கள் தெரிவிக்க தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X