33 லாரி டிரைவர்களை கொன்ற பயங்கர கொலைகாரன் கைது| Dinamalar

33 லாரி டிரைவர்களை கொன்ற பயங்கர கொலைகாரன் கைது

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

போபால்: ம.பி.,யில், லாரியில் ஏற்றி வரும் சரக்குகளை திருடுவதற்காக, இதுவரை, 33 லாரி டிரைவர்களை கொன்றுள்ள, பயங்கர கொலைகாரனை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள போபாலில், 50 டன் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி, சமீபத்தில் மாயமானது; இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், போபாலின் பில்கிரியா என்ற பகுதியில், அந்த லாரி டிரைவரின் உடலையும், அயோத்யா நகர் என்ற பகுதியில், காலியான லாரியையும் போலீசார் கைப்பற்றினர்.இந்த வழக்கு தொடர்பாக, இரும்பு கம்பிகளை வாங்கியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, ம.பி.,யின் மண்டிதீப் என்ற இடத்தைச் சேர்ந்த, ஆதேஷ் கம்ப்ரா, 48, என்ற டெய்லரை, போலீசார் கைது செய்தனர். பணத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபடும் போது நடந்த கொலை என்ற அளவில், போலீசார் விசாரணையை துவக்கினர்.ஆனால், ஆதேஷ் கம்ப்ரா கூறிய தகவல்களை கேட்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.டெய்லர் வேலை செய்து வந்த ஆதேஷ், நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, சின்ன சின்ன கொள்ளைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளான். பின், சரக்கு லாரிகளை ஓட்டி வரும் டிரைவர்களை நண்பர்களாக்கி, அவர்களுக்கு, மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்து, லாரியில் உள்ள சரக்குகளை விற்று, பணம் சம்பாதித்து வந்ததாக, போலீசாரிடம் தெரிவித்தான்.இதற்காக, இதுவரை, 33 லாரி டிரைவர்களை, அவன் கொலை செய்திருப்பது தெரியவந்தது. ம.பி., மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில், இந்த கொலைகளை இவன் செய்துள்ளது தெரியவந்தது. ஆதேஷுடன், அவனது கூட்டாளிகள் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X