கன்னியாஸ்திரி வழக்கு; ரூ.5 கோடி பேரம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்;
வழக்கை வாபஸ் பெற ரூ.5 கோடி பேரம்

கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாஸ்திரி,பலாத்கார வழக்கு,ரூ.5 கோடி,பேரம்


கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை,

13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும், 19ல், நேரில் ஆஜராகும்படி, பாதிரியார் பிராங்கோவுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பாதிரியாரை கைது செய்வது தொடர்பாக, விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement

பாதிரியார் பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால், 5 கோடி ரூபாய் கொடுப்பதாக, அவரது நண்பர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது என, பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பிராங்கோ மீது பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலையில், அவர் பேரம் பேசுவதாக கூறப்படுவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (48+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
13-செப்-201817:31:07 IST Report Abuse

Balakrishnanஎங்கய்யா போனீங்க சுடாலின் சைக்கோ நரமணி அவன் இவன் எல்லோரும் போங்க, அடுத்த பிரதமரே சுடாலின்தான் கைகாட்டிதானே வர்றதா ஏதோ கேள்வி. அங்கேயும் கருப்பு கொடி காணிச்சி "கோ பேக்" சொல்லலாம் (ஆனா ஒரு பிரச்சினை இருக்கு அடுத்த முறை நீங்க லண்டன் போக முடியாது ஏன்னா அவன் "கோ பேக்" சொல்லிடுவான்) , கன்னியஸ்திரி பிணத்தை வச்சி செலஃபீ எடுக்கலாம் என்னங்கோ எப்ப போரிங்கோ 5 கோடி கிடைக்குமாம், அதனாலே மத சார்பற்ற கிருத்துருவ கூட்டத்துக்கு சுடாலின் அவர்களை அழைக்கிறோம்.

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-செப்-201814:56:09 IST Report Abuse

Vijay D Ratnamஎன்னாது பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு அஞ்சி கோடியா, அம்புட்டு பேரும் கெளம்ப போறாய்ங்க‌.

Rate this:
13-செப்-201813:41:40 IST Report Abuse

ஆப்புஅப்பேர்ப்பட்ட நல்லவங்களா இருந்தா 5 கோடியை வாங்கிக் கொண்டு கையும் களவுமாக அந்த பாதிரியைப் பிடித்துக் கொடுத்து நீதிமன்றத்தில் பணத்தையும் ஒப்படைத்திருக்கலாம்.

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X