உலக பணக்காரர்கள்: பிரான்சை முந்தும் இந்தியா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலக பணக்காரர்கள்: பிரான்சை முந்தும் இந்தியா

Added : செப் 12, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உலக பணக்காரர்கள்,பிரான்ஸ்,முந்தும்,India,இந்தியா

புதுடில்லி : 'வரும், 2022ல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளை விட, இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் அதிகமாக இருப்பர்' என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'நைட் பிராங்க்' என்ற நிறுவனம், உலகளவில் பணக்காரர்கள் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017ல், இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது; இது, 2022ம் ஆண்டில், 340 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 2017ல், பிரான்சில், 230, ரஷ்யா, பிரிட்டனில், தலா, 220 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான சொத்து மதிப்புள்ள பணக்காரர்களாக திகழ்ந்தனர்.இந்த எண்ணிக்கை, 2022ல், பிரான்சில், 310, ரஷ்யாவில், 270, பிரிட்டனில், 260 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமையான பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு உயர்வு ஆகியவை, உலக பணக்காரர்களின் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளன. இவற்றால், 2022ல், உலகம் முழுவதும், 9,570 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து உடையோராக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 6,900 ஆக இருந்தது. உலக நாடுகளில், அதிக பணக்காரர்கள் உள்ள நாடாக, அமெரிக்கா தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்து உள்ள பணக்காரர்கள், 1,830. இது, ஐந்தாண்டுகளில், 2,500 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
13-செப்-201812:18:56 IST Report Abuse
krishnan BJP யோட சொத்து மதிப்பு என்ன
Rate this:
Share this comment
Cancel
Nathan - Bengaluru,இந்தியா
13-செப்-201811:50:31 IST Report Abuse
Nathan இவர்கள் விளம்பரத்துக்காக வெளி நாட்டு நிறுவனங்களுக்கு வாரி இறைக்கும் பணத்தை உள் நாட்டு வளர்ச்சிக்கு செய்திருந்தால் நாட்டு மக்கள் செழிப்போடு இருந்திருப்பார்கள்.... இவர்கள் நாட்டை ஆளும் லட்சணம்தான் நாளும் அறிந்தது தானே... மேலும் மக்கள் பணத்தை பிடுங்கி பெரும் பணக்காரர்கள் கையில் கொடுத்தால் மிகப் பெரும் பணக்காரர்கள் ஆவதும் இயற்கை தானே....
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-செப்-201809:03:39 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஒரு நாட்டின் வளம் ஒரே இடத்தில் குமிவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல... இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்டதை காட்டுகிறது புள்ளிவிபரங்கள்... there is a need to increase incometax rates in india...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X