வெங்காய வெடி மூட்டைகள் வெடித்து மூவர் உடல் சிதறி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெங்காய வெடி மூட்டைகள் வெடித்து மூவர் உடல் சிதறி பலி

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வெங்காய வெடி மூட்டைகள்  வெடித்து மூவர் உடல் சிதறி பலி

ஈரோடு: ஈரோட்டில், 'டாடா ஏஸ்' வாகனத்தில் இருந்து இறக்கிய போது, வெங்காய வெடி மூட்டைகள் வெடித்ததில், மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர். ஈரோட்டை சேர்ந்தவர், சுகுமாரன், 53. இவருக்கு, சாஸ்திரி நகர் பிள்ளையார் கோவில் வீதியில், இரண்டு ஓட்டு வீடுகள் உள்ளன. ஒரு வீட்டை, வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு வீட்டை சுகுமாரன், குடோனாக பயன்படுத்தி வருகிறார். நேற்று காலை, சுகுமாரன் மகன் கார்த்திக் ராஜா, 21, வெங்காய வெடி மூட்டைகளை, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, சாஸ்திரி நகர் குடோனுக்கு கொண்டு வந்தார். அவருடன், செந்துார பாண்டியன், 50, முருகன், 45, ஆகியோர் வந்தனர்.வாகனத்தில் இருந்து, 13 மூட்டைகளை, அங்குள்ள குடோன் முன் இறக்கி வைத்தனர். மேலும் வாகனத்தில், இரு வெங்காய வெடி மூட்டைகள் இருந்தன. இந்நிலையில், தண்ணீருடன் இருந்த இரண்டு வாட்டர் கேன்களை எடுத்த முருகன், டாடா ஏஸ் வாகனத்திற்குள் துாக்கி வீசினார். அவை, வெங்காய வெடி மூட்டைமீது விழுந்தன. அதில் ஏற்பட்ட உராய்வில், வெங்காய வெடி முட்டை, வெடித்து சிதறியது. ஒரே சமயத்தில் அனைத்து வெடிகளும் வெடித்தன.அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. வாகனத்தில் இருந்த முருகன், செந்துார பாண்டியன் துாக்கி எறியப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர். மூட்டையை அடுக்கி வைத்து கொண்டிருந்த கார்த்திக் ராஜாவும் துாக்கி வீசப்பட்டு இறந்தார். டாடா ஏஸ் வாகனம் உருக்குலைந்தது. வெடி விபத்து நடந்த வீட்டின் அருகே நின்ற, ஆட்டோ ஒன்று சேதமடைந்தது.ஆறு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. ஏழு வீடுகள் ஓரளவு சேதத்துடன் தப்பின. பல வீடுகளின் சுவற்றில் விரிசல் விழுந்தது.இறந்த கார்த்திக் ராஜா, ஈரோடு இன்ஜினியரிங் கல்லுாரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்தார். வெடி விபத்தின் அதிர்வு, 500 மீட்டருக்கு அப்பால் உள்ள வீடுகளிலும் உணரப்பட்டது. ஈரோடு தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். ஈரோடு எஸ்.பி., - கூடுதல் எஸ்.பி., சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவு பிரிவினர், க்யூ பிராஞ்ச் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-செப்-201804:45:40 IST Report Abuse
Bhaskaran வெங்காயவெடிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் உண்டே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X