தலைமை நீதிபதி வீட்டில் ரகளை : 75 வழக்கறிஞர்களுக்கு, 'சம்மன்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தலைமை நீதிபதி வீட்டில் ரகளை : 75 வழக்கறிஞர்களுக்கு, 'சம்மன்'

Added : செப் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில், ரகளை செய்த வழக்கில், 75 வழக்கறிஞர்கள், அக்., 10ல் ஆஜராகுமாறு, சி.பி., - சி.ஐ.டி., சிறப்பு நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியுள்ளது.சென்னையில் வசிப்பவர், பாண்டிராஜ். இவரிடம், கோவையைச் சேர்ந்த, சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர், 'சவுத் இந்தியா பாட்டிலிங்' என்ற, நிறுவனத்தை துவக்கவுள்ளதாகவும், அதில், 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், லாபத்தில், 25 சதவீதம் பங்கு தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பி, பாண்டிராஜ், 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஆனால், சுஜை ஆனந்த் உள்ளிட்ட மூவரும், 50 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாண்டிராஜ், 2015ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.போலீசார், சுஜை ஆனந்த் உள்ளிட்ட, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என, பாண்டிராஜுக்கு, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி சிவனாண்டி நெருக்கடி கொடுத்துள்ளார்.இந்நிலையில், தன் புகார் தொடர்பாக, 2015 ஏப்., 2ல், சென்னை மத்திய குற்றப்பிரிவில், பாண்டிராஜ் ஆஜரானார். அவரை, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட, 10 பேர் மிரட்டி, கடத்த முயன்றுஉள்ளனர். இது தொடர்பாக, பாண்டிராஜ் புகாரின்படி, வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, நீதிமன்றத் திற்கு விடுமுறை என்பதால், 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.அவர்கள், 2015 ஏப்., 4ல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, சஞ்சய் கிஷன் கவுல் வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், 'தலைமை நீதிபதி, டில்லி சென்றுள்ளார்' என, கூறியுள்ளனர்.ஆனால், தலைமை நீதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, பட்டினப்பாக்கம் போலீசார், 75 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த மூன்று வழக்கு களையும், சென்னை உயர் நீதிமன்றம், சி.பி., - சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்தது.இந்நிலையில், சி.பி., - சி.ஐ.டி., போலீசார் விசாரணை முடித்து, பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள, எழும்பூர் நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள, சி.பி., - சி.ஐ.டி., சிறப்பு நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜிவ், குற்றம்சாட்டப்பட்ட, 75 வழக்கறிஞர்களும், அக்., 10ல் ஆஜராக, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
13-செப்-201816:57:25 IST Report Abuse
Giridharan Srinivasan சம்பந்தப்பட்ட 7 5 [rowdygalaiyum ] வழக்கறிஞர்களையும் பார் கவுன்சில் மெம்பெர்ஸ் லிஸ்டில் இருந்து எடுத்து விட வேண்டும். இந்த ரௌடிகள் தங்களை வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்ள வாழ் naal தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X