ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை நீட்டிப்பு

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விசாரித்து வரும், விசாரணை கமிஷனின் பதவி காலம், மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரியில், மாநிலம் முழுவதும், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில், சில மாவட்டங்களில், வன்முறை வெடித்தது.இது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில், கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷனின் பதவி காலம், ஆகஸ்டில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மேலும், மூன்று மாதங்களுக்கு, அதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, பொதுத்துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X