'ஓசி' பயணம் : ரூ.4 கோடி அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஓசி' பயணம் : ரூ.4 கோடி அபராதம்

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: சேலம் ரயில்வே கோட்டத்தில், டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்த, 18 ஆயிரத்து, 496 பயணியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3.93 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சேலம் ரயில்வே கோட்ட வணிக பிரிவு குழுவினர்,ஏப்., முதல் ஆக., வரை சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஸ்டேஷன்களில் தீவிர டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர்.ஐந்து மாதத்தில், பல்வேறு வகையில், 3.93 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இதில், டிக்கெட் இல்லாமல் பயணித்ததாக, 75.33 லட்சம் ரூபாய்; பயணத்துக்குரிய டிக்கெட் இல்லாமல் சென்றவர்களிடம், 3.17 கோடி ரூபாய்; பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்து சென்ற வகையில், 9.67 லட்சம் ரூபாய் என, மொத்தம், 3.93 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X