பெண் மர்ம சாவு: கணவர், 'சரண்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மர்ம சாவு: கணவர், 'சரண்'

Added : செப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காட்டுமன்னார் கோவில் :சிதம்பரம் அருகே, ெபண் மர்ம சாவில், திடீர் திருப்பமாக, அவரது கணவர், வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்து, சொத்துக்காக மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர், செல்வராஜ், 58; ஓய்வு பெற்ற காவலர். இவரது மனைவி உமாராணி, 47; இவர், ஆக., 21ல் வீட்டின் அருகே, வயல் வெளியில் இறந்து கிடந்தார். இவரது சகோதரர், உமா சங்கர், தன் தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக, போலீசில் மனு அளித்தார். இதன்படி, குமராட்சி போலீசார், ஈமச்சடங்கிற்கு தயாராக இருந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.சந்தேக மரணம் பிரிவின் கீழ், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், உமாராணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்படி, தலைமறைவான அவரது கணவர் செல்வராஜை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மேலவன்னியூர், வி.ஏ.ஓ., முன்னிலையில், செல்வராஜ்சரணடைந்தார்.போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மன உளைச்சலால், ஐந்து ஆண்டுகளுக்கு முன், போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதற்கிடையே, என் மனைவி உமாராணி, விருத்தாசலம் கோர்ட்டில், விவாகரத்து கேட்டு மனு அளித்து இருந்தார். அதில் இருவரையும் சமரசம் செய்து, குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். மேலும், குமராட்சி காவல் நிலையத்தில், குடும்ப பிரச்னை வழக்கு உள்ளது. அதிலும் சமாதானம் செய்து வைத்தனர்.உமாராணி பெயரில் இருந்த சொத்துகளை, என் பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டபோது அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து சம்பவத்தன்று, கத்தியால் தலையில் குத்தி,பக்கத்தில் இருந்த வாய்க்காலில் தள்ளிவிட்டுச் சென்றேன். இதில் அவர் இறந்ததால், போலீசார் என்னை தேடுவதை அறிந்து, சரணடைந்தேன்.இவ்வாறு, வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, போலீசார், செல்வராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X