சந்தித்தேன்: மல்லையா ; முழு பொய்: ஜெட்லி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சமரசம் குறித்து நிதியமைச்சரை சந்தித்தேன்: மல்லையா
முழு பொய், சிறிதளவும் உண்மையில்லை: ஜெட்லி

புதுடில்லி : "இந்தியாவை விட்டு புறப்படுவதற்கு முன் வங்கிக் கடன் பிரச்னையில் சமரசம் செய்வது குறித்து, நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்," என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

ஆனால் "இது, முழு பொய் இதில் சிறிதளவும் உண்மையில்லை. இந்தப் பிரச்னை குறித்து நான் அவரை சந்திக்கவேயில்லை," என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Arun Jaitley,BJP,Vijay Mallya,அருண் ஜெட்லி,பா.ஜ,மல்லையா,விஜய் மல்லையா


வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து, 2016 மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியுள்ளார்.

அவரை நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு

தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராக வந்த மல்லையா கூறியதாவது:

வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சமரசம் செய்து கொள்வது குறித்து, கர்நாடகா நீதிமன்றத்தில் விரிவான திட்டத்தை சமர்ப்பித்துள்ளேன். அதில் நீதிமன்றம் தகுந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன். வங்கிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு கடன் திருப்பித் தர வேண்டும். அதற்கு தயாராக உள்ளேன்.

ஜெனிவாவில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து நான் புறப்பட்டேன். அவ்வாறு புறப்படுவதற்கு முன் நிதி அமைச்சரை சந்தித்து வங்கி கடன் பிரச்னையில் சமரசம் செய்து கொள்வதாகக் கூறினேன். ஆனால், இந்த சமரசத்துக்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், நான் நாடு திரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், மல்லையா கூறியதை மறுத்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, கூறியதாவது: விஜய் மல்லையா கூறிய கருத்து குறித்து அறிந்தேன். சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக என்னை சந்தித்து

Advertisement

பேசியதாக அவர் கூறியுள்ளார். இது, முழு பொய்; சிறிதளவும் உண்மை இல்லை.

2014ல் இருந்து, என்னை சந்திப்பதற்குமல்லையாவுக்கு நான் நேரம் ஒதுக்கியது கிடையாது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அவர் ஒருமுறை சபையில் இருந்து நான் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும்போது தன் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ராஜ்யசபா வராண்டாவில் என்னிடம் பேச முயன்றார்.

'சமரசம் செய்து கொள்கிறேன்'என, அவர் கூறினார். இவ்வாறு அவர் பல பொய் வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்துள்ளது எனக்கு தெரியும். அதனால் இது தொடர்பாக, என்னிடம் பேசிப் பயனில்லை. கடன் வழங்கிய வங்கிகளுடன் சமரசம் செய்யும்படி கூறினேன். இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (44+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-செப்-201812:59:16 IST Report Abuse

நக்கீரன்பண்ணுறதையும் பண்ணிட்டு, முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு நடிக்கும் நிதியமைச்சருக்கு ஒரு பெரிய ஆஸ்கர் விருதே தரலாம். பாவம் மோடி இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படித்தான் அரசை நடத்துகிறாரோ என்று தெரியவில்லை.

Rate this:
Balakrishnan - Bangalore,இந்தியா
13-செப்-201821:21:04 IST Report Abuse

Balakrishnanஅருண் ஜைட்டலி மல்லையாவிற்கு உதவி செய்வதாயிருந்தால் அது ரகசியமாக செய்யப்பட்டிருக்கும். பாராளுமன்றத்தில் எல்லார் முன்னிலையிலும் சந்திப்பு நடந்திருக்காது. அரசியல்வாதிகளுக்கு இந்த அறிவு கூடவா இருக்காது ? எனவே இது ஒரு சாதாரண சந்திப்பு தான் என்று பொது அறிவு உள்ளவர்கள் எல்லோருக்கும் விளங்கும்

Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
13-செப்-201813:23:05 IST Report Abuse

Ganapathyஒண்ணும் சொல்லிறாதீங்க ,அடிச்சுக்கூட கேட்பாக ஒண்ணும் சொல்லிறாதீங்க, ஏதும் சொன்னிகளா ? என்று வடிவேல் ஒரு திரைப்பட காமடி . அந்த நிலைமைதான் இப்போ ஜெட்லீக்கு .

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X