பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம்

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர் : திருவாரூர் அடுத்த, விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் மகா கும்பாபிேஷகம்,நேற்று, கோலாகலமாக நடந்தது.திருவாரூர் அடுத்த, விளமலில், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோவில் உள்ளது. 2004ல், இக்கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், கடந்த சில மாதங்களுக்கு முன், திருப்பணிகள் துவங்கின. திருப்பணிகள் முடிந்து, 6ம்தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது.கடந்த, 9ம்தேதி மாலை,6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. அன்று முதல், தொடர்ந்து, ஆறுகால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 7:10 மணிக்கு மூலவர், அம்பாள் கோபுரம் மற்றும் விமானம், நடராஜர், விநாயகர், மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர்,சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகாகும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர் சந்திரசேகர சிவாச்சாரியார் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X