மீண்டும் தலைவரானார் அத்வானி | Dinamalar

மீண்டும் தலைவரானார் அத்வானி

Added : செப் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: லோக்சபா நெறிமுறை குழுவின் தலைவராக, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். லோக்சபாவின் பல்வேறு குழுக்களின் தலைவர்களை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார். இது குறித்து, லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:லோக்சபா, எம்.பி.,க்கள் ஒழுங்குமுறையோடு நடந்து கொள்வதை உறுதி செய்யும், நெறிமுறை குழுவின் தலைவராக, அத்வானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். எம்.பி.,க்கள் ஒழுக்கமில்லாமல் நடந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.சபைக்கு வராத, எம்.பி.,க்கள் குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக, பி.கருணாகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசின் உறுதிமொழிகள் குழுவின் தலைவராக, ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.சபையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் குழு தலைவராக, சந்திரகாந்த் கைரே, துணை சட்டக் குழுத் தலைவராக, திலிப்குமார் மன்சுக்லால் காந்தியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201808:31:46 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றி கொள்ளவில்லை என்றால் அத்வாணிதான் தோல்விக்கு காரணம் என்று சொல்லிவிடலாம்
Rate this:
Share this comment
Karunan - udumalpet,இந்தியா
13-செப்-201812:08:16 IST Report Abuse
Karunanஅட செய்தியை சரியா படிக்கமாடீங்களா ..கருத்து வேற சொல்ல வந்திட்டீங்க...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-செப்-201813:01:22 IST Report Abuse
Nallavan Nallavan"லோக்சபா நெறிமுறை குழுவின் தலைவராக" ..... இதில் வெற்றி தோல்வி எங்கிருந்து வந்தது ? எதில் வெற்றி ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X