இந்து அமைப்புகள் சார்பில் 213 சிலைகள் பிரதிஷ்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து அமைப்புகள் சார்பில் 213 சிலைகள் பிரதிஷ்டை

Added : செப் 13, 2018
Advertisement

போத்தனுார்:போத்தனுார், மதுக்கரை, செட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், இந்து அமைப்புகள் மற்றும் மக்கள் சார்பில், 213 விநாயகர் சிலைகள், இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.நாடு முழுவதும் இன்று, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் மக்கள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.போத்தனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தமிழகம், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில், 68 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.இதில், மாச்சம்பாளையம் இந்து முன்னணி சார்பில், சித்தி விநாயகர் கோவிலில், பத்தரை அடி உயரமுள்ள வலம்புரி விநாயகர் சிலை வைக்கப்படுகிறது.குனியமுத்துாரில், 41, க.க,சாவடியில், 33, மதுக்கரையில், 52, செட்டிபாளையத்தில், 19 என மொத்தம், 213 சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X