முன்பதிவில்லா ரயில் டிக்கெட் செயலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்பதிவில்லா ரயில் டிக்கெட் செயலி

Added : செப் 13, 2018
Advertisement

கோவை:சேலம் ரயில்வே கோட்டத்தில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 'மொபைல் போன்' செயலி மூலம் இதுவரை, 27 லட்சத்து, 69 ஆயிரத்து, 495 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.மத்திய ரயில்வே அமைச்சகம், '5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்' எனும் திட்டத்தை அறிவித்தது. இதன்படி, முன்பதிவற்ற 'டிக்கெட்', 'சீசன் டிக்கெட்', நடைமேடை 'டிக்கெட்'களை மொபைல் போன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.இதற்கென, சேலம் ரயில்வே கோட்டத்தில், UTS (UTSONMOBILE) எனும் ஜி.பி.எஸ்., அடிப்படையிலான செயலி, கடந்த ஏப்.,14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.இந்த செயலி வாயிலாக, காகிதம் இல்லாத டிக்கெட்டை, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து, 25 மீட்டர் முதல் 5 கி.மீ., தொலைவுக்குள், மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய திட்டம் வாயிலாக, சேலம் கோட்டத்தில் இதுவரை, 27 லட்சத்து, 69 ஆயிரத்து, 495 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.--அதிக கோவை பயணிகள்!சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,'சேலம் கோட்டத்தில் இச்செயலி மூலம், டிக்கெட் பெற்று, 2.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கோவை ரயில்வே ஸ்டேஷனில் மட்டும், 87 ஆயிரம் பேர் பயணித்து வருவாய் ஈட்டித்தந்துள்ளனர். மேட்டுப்பாளையம் ஸ்டேஷன், 2 லட்சத்து, 31 ஆயிரத்து, 770 ரூபாய், ஈரோட்டில், 5.25 லட்சம் ரூபாய், சேலத்தில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 600 ரூபாய் என சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட, 96 ஸ்டேஷன்களில் இதுவரை, 27 லட்சத்து, 69 ஆயிரத்து, 495 ரூபாய் வசூலாகியுள்ளது' என்றார்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X