பாம்பன் மீனவர்கள் ஸ்டிரைக் : குமரி, கேரளாவில் தஞ்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் மீனவர்கள் ஸ்டிரைக் : குமரி, கேரளாவில் தஞ்சம்

Added : செப் 13, 2018
Advertisement
பாம்பன் மீனவர்கள் ஸ்டிரைக் :  குமரி, கேரளாவில் தஞ்சம்

ராமேஸ்வரம்: 12வது நாளாக பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், மீனவர்கள் வேலை தேடி கேரளாவில் தஞ்சம் புகுந்தனர்.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளதால் அம்மாநில வியாபாரிகள் பாம்பனில் மீன் வாங்க வராததால், மீன் விலை 30 முதல் 40 சதவீதம் குறைந்தது.இதனால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் செப்.,2 முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.மேலும் டீசல் விலை உயர்வால் மீன்பிடிக்க முடியாமல் பாதித்த பாம்பன் மீனவர்கள் செப்.,11ல் எதிர்கட்சிகளின் பந்த்க்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனால் இன்றுடன் 12வது நாளாக பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.மேலும் இலங்கை கெடுபிடியால் அச்சத்தில் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பதை தவிர்த்ததால், தற்போது 1300 விசைப்படகில் 300 படகில் மட்டுமே மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கரை திரும்புகின்றனர்.இதில் மீனவருக்கு எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி வருவாய் இழப்பும் ஏற்பட்டது.தஞ்சம்:இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் 70 சதவீத மீனவர்கள் வேலை, வருவாய் இன்றி வீடுகளில் முடங்கியதால், அன்றாட குடும்ப செலவுக்கு பரிதவித்தனர்.இந்நிலையில் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை தேடி கேரளா, கன்னியாகுமரியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X