திருப்பரங்குன்றத்தில் பணமழை : மார்க்சிஸ்ட் எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் பணமழை : மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

Added : செப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ''திருப்பரங்குன்றம், திருவாரூரில் மக்களுக்கு பணமழை கொட்டும்,'' என மதுரையில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொல்வோரை கைது செய்து மிரட்டுகின்றனர். அரசின் ஊழலை கண்டித்து செப்.,15 முதல் பிரசாரம் நடத்தப்படும். இங்கு ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை. தேவையற்ற திட்டத்தை லாபநோக்குடன் செயல்படுத்துகின்றனர். சேதமாகும் அணைகளை புதுப்பிக்க அரசு முயற்சிக்கவில்லை.மத்திய, மாநில அரசு நிர்ணயிக்கும் 52 சதவீத வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. முக்கொம்பு அணை சேதம் குறித்து முதல்வர் பழனி சாமி, காய்ச்சல் வருவது போலத்தான் என்கிறார். இது போன்று முதல்வர், அமைச்சர்கள் 'நகைச்சுவை நடிகர்கள் போல்' பேசுவது வேதனை தருகிறது. குட்கா வழக்கில் யார் மீதும் சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை வைத்து ஆட்சியில் நீடிக்கத்தான் முதல்வர் பழனிசாமி விரும்புகிறார். இடைதேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் மக்களை சந்திக்க முடியாது. பணத்தை வைத்தே சந்திக்க உள்ளனர். வரும் தேர்தலில் இக்கட்சி 'டெபாசிட்' கூட பெறாது. திருப்பரங்குன்றம், திருவாரூரில் லாட்டரி சீட்டு அடித்தது போல் மக்களுக்கு பணமழை கொட்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
13-செப்-201808:18:15 IST Report Abuse
Idithangi எவ்வளவு குலுக்கினால் இப்போது எல்லாம் தகர டப்பா நிறைய மாட்டேங்குதேங்குற கவலையில் சொல்லி விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201804:04:22 IST Report Abuse
uthappa தேவை இல்லாத, நாட்டுக்கு ஒவ்வாத கட்சி இந்த கம்யூனிஸ்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X