மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையின்றி குறைந்து வரும் பெரியாறு அணை நீர்மட்டம்

Added : செப் 13, 2018
Advertisement

கூடலுார்: நீர்ப்பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் துவங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே மே 28 ல் துவங்கியது. அப்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக இருந்தது. அதன்பின் பருவமழை தொடர்ந்து சீராக பெய்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஆக. 14 ல் 136 அடியை எட்டியது. ஆக. 15 ல் பெய்த கன மழை காரணமாக ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 141 அடியானது. ஆக. 16 ல் 142 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் மழை குறையத் துவங்கியது.கடந்த சிலநாட்களாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. செப். 1 முதல் நீர்ப்பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து நேற்று காலை நிலவரப்படி 131.70 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து 377 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு 1867 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 5095 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X