து'டோல்கேட்'களில் 24 மணி நேர ஆய்வு : போக்குவரத்து ஆணையம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

து'டோல்கேட்'களில் 24 மணி நேர ஆய்வு : போக்குவரத்து ஆணையம் உத்தரவு

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி: விபத்து, கடத்தலை தடுக்க ஆர்.டி.ஓ., தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 'டோல்கேட்'களில் வாரத்தில் ஒருநாள் 24 மணிநேர வாகன சோதனையில் ஈடுபட போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 'டோல்கேட்'கள்' (சுங்கச்சாவடிகள்) உள்ளன. தமிழகத்தில் 42 உள்ளன.தமிழகத்தில், விபத்துக்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களுக்கு பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என மாநில குற்ற ஆவண காப்பகம், போக்குவரத்து ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், சுழற்சி முறையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 'டோல்கேட்'களில் வாரந்தோறும் ஒருநாள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் மாலை 6:00 மணி வரை அரசு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது. முறையான 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாதது, ஆவணங்களில் குறைபாடு, அதிகபாரம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதித்து, கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X