தொடரும் புறக்கணிப்பு பஸ் பயணிகள் அல்லல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் புறக்கணிப்பு பஸ் பயணிகள் அல்லல்

Added : செப் 13, 2018
Advertisement

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியை புறக்கணித்து பை-பாசிலேயே பஸ்கள் செல்ல முயற்சிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக நடந்த வண்ணம் உள்ளது.அவிநாசி வழியே கோவை செல்லும் பஸ்கள், கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து மேற்கே, ஒரு கி.மீ., துாரத்தில் இறக்கி விடுவதும், கோவையில் இருந்து அவிநாசி வழியே செல்லும் திருப்பூர், ஈரோடு, சேலம் பஸ்கள், கணியூர் தாண்டியதும் பை-பாசில் இருந்து கருமத்தம்பட்டி பிரியும் சாலையில் இறக்கி விடுவதும் தொடர்கிறது.பல அரசு மற்றும் தனியார் பஸ்கள் கருமத்தம்பட்டிக்கு பயணிகளை ஏற்றுவதே இல்லை. இதுகுறித்து பலமுறை புகார் தரப்பட்டும், போலீசார் பை-பாசில் நின்று பஸ்களை ஊருக்குள் திருப்பி விட்டும், இப்பிரச்னை தீர்ந்தபாடில்லை. பஸ்களை பலமுறை சிறைப்பிடித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அதன்பின், இரு நாட்கள் பஸ்கள் வந்து செல்லும். அதன்பின், பை-பாசிலேயே சென்று விடுகின்றன. ஊருக்குள் வராமல் செல்லும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X