போக்குவரத்து நெரிசல்; அன்னூர் ஸ்தம்பிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசல்; அன்னூர் ஸ்தம்பிப்பு

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அன்னுார்:போலீசார் போதிய அக்கறை செலுத்தாததால், அன்னுாரில், இரண்டாம் நாளாக நேற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் - அவிநாசி நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது. வழக்கமாக காலை, மாலை நேரங்களில் மட்டும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். நேற்று முகூர்த்த நாள் என்பதால், நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு துவங்கிய போக்குவரத்து நெரிசல் நேற்று மதியம் வரை குறையவில்லை.கோவை ரோட்டில், அச்சம்பாளையம் பிரிவு வரை, 2 கி.மீ., துாரத்துக்கு கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நின்றன. அவிநாசி ரோட்டில் சோமனுார் பிரிவு வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நின்றன. சத்தி ரோட்டில் அல்லிகுளம் பிரிவு வரை, 2 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நின்றன. மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆயிமாபுதுார் பிரிவு வரை, 1.5 கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் காத்திருந்தன. அன்னுார் நகரை கடக்க குறைந்தபட்சம், 20 நிமிடங்கள் ஆனது. வாகனங்களில் வந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். காத்திருக்க முடியாமல், பஸ்சில் வந்த பலர், அன்னுார் பஸ் ஸ்டாண்டுக்கு, 2 கி.மீ., முன்பே இறங்கி நடந்து, பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.சேவூரை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம், அவிநாசியில் அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு நெரிசல் இல்லை. அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டும் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ளார்' என்றார்.நேற்று முன்தினம் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் புகார் செய்தபோது, 'முதல்வர் கோவை விமான நிலையம் வருவதால், அன்னுார் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர்' என்று கூறினர்.நேற்று சத்தி ரோடு கார்னரில் ஒரு ஊர்க்காவல் படை வீரரும், நான்கு ரோடுகள் சந்திக்கும் கைகாட்டியில் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் பணியில் இருந்தனர். அதனால், போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை. செவ்வாய் மதியம், 12:00 மணிக்கு துவங்கி, புதன் மதியம், 2:00 மணி வரை நெரிசல் தொடர்ந்தது. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, அன்னுார் போலீசார் போதுமான அக்கறை காட்டாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தீர்வு என்ன?அன்னுாருக்கு மேற்கே புறவழிச்சாலை அமைக்க வேண்டும். சத்தி ரோட்டில் இட்டேரி ரோட்டை அகலப்படுத்த வேண்டும். மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஓதிமலை ரோட்டை ஒரு வழிப்பாதையாக்க வேண்டும். கைகாட்டியில், 'ரவுண்டானா' அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். இந்நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X