ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு : சீரமைப்பு பணிகள் தீவிரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு : சீரமைப்பு பணிகள் தீவிரம்

Added : செப் 13, 2018
Advertisement
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு : சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியில், 7,200 கன அடியாக நீர் வரத்து குறைந்ததால், வெள்ளத்தால் சேதமடைந்த மெயின் அருவி பகுதிகளில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு நீர் வரத்து குறைந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, 7,500 கன அடியாக இருந்த நீர் வரத்து, மாலை, 5:00 மணிக்கு, 7,200 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து, 66வது நாளாக, காவிரியாற்றில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துஉள்ளது.வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நீர்வீழ்ச்சி தடுப்புச்சுவர், இரும்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மெயின் அருவி பகுதிகளில் சீரமைப்பு பணி முடிந்த பின், பெண்கள் அருவி, உடை மாற்றும் அறை ஆகியவற்றை சீரமைக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அத்திமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து, பெரியபாணிக்கு செல்லக்கூடிய பாதை சேதமானதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, மாற்றுப் பாதையில் பரிசல்களை இயக்கி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X