பில் வாங்க அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பில் வாங்க அறிவுரை

Added : செப் 13, 2018
Advertisement

அன்னுார்:விதை வாங்கும்போது, பில் கேட்டு வாங்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்ட விதை சான்று துறை துணை இயக்குனர் மோகன சுந்தரம் அறிக்கை:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்துள்ள தென்மேற்கு பருவ மழை காரணமாக, விவசாயிகள், சோளம், மக்காச்சோளம், நெல், பயறு வகை மற்றும் காய்கறி பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். தங்கள் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையம் மற்றும் நாற்றுப்பண்ணைகளில், விதை மற்றும் நாற்றுகள் வாங்கி வருகின்றனர்.எங்கு விதை அல்லது நாற்று வாங்கினாலும், பில் கேட்டு வாங்க வேண்டும். அது முக்கிய ஆவணம். விதையின் தரத்துடன் தொடர்பு உடையது. லைசென்ஸ் இல்லாமல் இயங்கும் நாற்றுப்பண்ணை அல்லது விதை விற்பனை நிலையங்கள் குறித்து தகவல் தெரிந்தால், கோவை விதை சான்று அலுவலகத்துக்கு, 0422 - 2989 910 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X