மகா கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகா கும்பாபிஷேக விழா

Added : செப் 13, 2018
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்துாரிபாளையம் ரோட்டில் உள்ள பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நேற்று காலை, புனிதநீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வருதல் ஆகிய நடந்தன. காலை, 9:00க்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடலுார் கவுண்டம்பாளையத்தில் உள்ள வாராஹி மந்தராலய பீடாதிபதி வாராஹி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X