'ஆட்சிக்கு ஆயுள் இன்னும் இருபது நாட்கள் தான்' : புகழேந்தி புது ஆரூடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆட்சிக்கு ஆயுள் இன்னும் இருபது நாட்கள் தான்' : புகழேந்தி புது ஆரூடம்

Added : செப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைக்கானல்: அ.தி.மு.க., அரசு இன்னும் 20 நாட்களில் கவிழும்' என, அ.ம.மு.க., கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.கொடைக்கானலில் அவர் கூறியதாவது: பழனிச்சாமி ஆட்சி தொடர்வதில் ஓ.பி.எஸ்., தரப்பினருக்கு உடன்பாடில்லை. பிரதமர் மோடி முன்னிலையில் இரண்டரை ஆண்டு ஆட்சியாக சரிபாதியாக பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆட்சி காலம் முடிந்தும், அவர் பதவி விலகாததால் ஓ.பி.எஸ்., தரப்பினர் கோபத்தில் உள்ளனர். இதனால் இன்னும் 20 நாட்களில் ஆட்சி கவிழும். 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்புக்கு பின்பு 70 எம்.எல்.ஏ.,க்கள், 10 அமைச்சர்கள் தினகரன் தலைமையை ஏற்பார்கள். 8 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ரூ. 360 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ளோம். சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது. கர்நாட உள்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்தவுடன் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலகினார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மீண்டும் அமைச்சர் ஆனார். அவ்வாறு ஏன் விஜயபாஸ்கர் செய்யவில்லை. இடைத்தேர்தலில் அ.ம.மு.க., இமாலய வெற்றி பெறும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201815:39:46 IST Report Abuse
Durai சம்பூர்ண யோக்கிகயர் வாரரு ....எதையோ விளக்கி வையுங்கள் என்பார்கள் அது போல வந்துட்டான் ஜோசியம் சொல்ல ....இதையே கேட்டு கேட்டு புளித்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-செப்-201804:05:37 IST Report Abuse
uthappa இமாலய வெற்றி பெற்று, கரி பூசப்போவது யார் முகத்தில்? பாவம் அந்த குடும்பம். இலவு காத்த கிளி ஆகும் போல் இருக்கே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X